Explore here for regular updates and information

Chairman

முனைவர்.ப.பாஸ்கர்

தாளாளர் 

கல்வி என்பது வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான ஒன்று. பெண்கல்வி மூலம் மாவட்டமும் தேசமும் வளர்ச்சியடையும் என்பதை நாங்கள் நம்புகிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கல்வி இருந்தால் தான் இச்சமுதாயம் முன்னேற்றமடையும் என்பதை அனுபவத்தின் மூலம் உணர்ந்ததின் விளைவாக தர்மபுரி மாவட்டத்தின் முதல் மகளிர் கல்லூரியாக பச்சமுத்து கல்லூரி நிறுவனம் துவங்கப்பட்டது.

கல்வி நிறுவனம் என்பது பெயர் பெற்றதாக மட்டுமல்லாமல் ஒழுக்கக் கோட்பாடுகளையும் நற்செயல்களையும் பின்பற்றுவதோடு அதையே மாணவிகளுக்கும் கற்றுக்கொடுப்பதாக இருத்தல் வேண்டும். பச்சமுத்து கல்லூரி துவங்கப்பட்ட காலம் முதல் பெற்றோர்கள், மாணவிகள் மற்றும் இம்மாவட்ட மக்களின் நன்மதிப்பையும் நல்லாதரவையும் பெருமளவில் பெற்று சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
மாணவிகள் தங்களின் திறன்களை அறியச் செய்து இன்றைய சவால்களையும் அதன் தேவைகளையும் உணர்ந்து செயல்படும் வகையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சமூக தேவை எந்தத் துறையில் இருப்பினும் அரசியலாக இருந்தாலும் அதை நேர்மறை அணுகுமுறையோடு கையாள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஐரோப்பிய கலை உட்கட்டமைப்பு வசதியுடன் ஒரு முழுமையான சிறந்த கல்வியை உலகத்தரத்துடன் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.